வியாழன், 12 ஜூன், 2014

மொழியாக்கக் கவிதைகள்


நஹிதா இஜ்ஜாத்
நஹிதா இஜ்ஜாத் ஜெருசலேமில் பிறந்தவர். பாலஸ்தீனத்தில் நடந்த ஆறு நாள் போரின் போது, (ஜூன் 5–10,1967) தன் ஏழு வயதில் ஜெருசலேமிலிருந்து வெளியேற்றப்பட்டு, நாற்பது ஆண்டுக்களுக்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கும் பாலஸ்தீன அகதி. தனது பாலஸ்தீன அனுபவங்களையும், நினைவுகளையும், உணர்வுகளையும் இரண்டு கவிதைத் தொகுதிகளில் பதிவு செய்திருக்கின்றார். அவை: I Believe in Miracles and Palestine, The True Story.  


HUMANITY, WHERE ARE YOU?

I am being slaughtered
Under your watchful eyes
I am cold . . . cold . . . cold
I cringe
I cry

Humanity, where are you?
Why do you turn your face away?
Why do you keep looking the other way?
I am here
Languishing
In Gaza's alleyways
Humanity, where are you?
Look at me
See me

I am here
Sighing
In Gaza's alleyways
I cringe
I cry

Humanity,
Enough turning the other way!
Turning a deaf ear
Turning a blind eye
While I,
And oh! my poor children
Die

மனிதநேயமே,நீ எங்கே இருக்கிறாய்?

கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் உன் பார்வையின் முன்னிலையில்
இரக்கமின்றி நான் கொல்லப்படுகின்றேன்
எனக்குக் குளிர்கின்றது…குளிர்…குளிர்…
நான் கெஞ்சுகிறேன்
நான் கதறுகிறேன்

மனிதநேயமே, நீ எங்கே இருக்கிறாய்?
ஏன் உன் முகத்தை வெளியே திருப்புகின்றாய்?
ஏன் உன் பார்வையை எப்பொழுதும் வேறெங்கோ வைத்துக்கொள்கின்றாய்?
சோர்வடைந்த நான்
இதோ… காசாவின் அடைபட்ட
சந்துகளில் கிடக்கின்றேன்
மனிதநேயமே, நீ எங்கே இருக்கிறாய்?
என்னைப் பார்
என்னைக் கூர்ந்து கவனி

காசாவின் அடைபட்ட
சந்துகளில் கிடந்து
பெரும் ஏக்கத்தோடு
நான் கெஞ்சுகிறேன்
நான் கதறுகிறேன்.

மனிதநேயமே,
போதும், உன் பாராமுகம்!
உன் செவிட்டுக் காதையும்
குருட்டுக் கண்ணையும்
கொஞ்சம் திருப்பு
இங்கே, நானும்…
ஓ! என் ஏழைக் குழந்தையும்
இறந்துகொண்டிருக்கின்றோம்.  


 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


இமென் பென்னனி துனிஷியாவில் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் இயங்குபவர். தற்கால அறபு அமெரிக்கக் கவிதை, அறபு இலக்கியம், அமெரிக்க இலக்கியம், இலக்கிய மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டுவரும் இளம் அறிஞர். 

 

Combat Eyes

It lurks behind their eyes,
Where the soul used to live.
Eyes, which have seen too much
Of war’s bad places
Where reality is too far
Beyond human comprehension,
Beyond human reasoning,
Beyond human sanity.

The nether world of death and carnage,
Flash-burned and sealed in a fixed dimension
Of atrocities bordered by unspeakable horror
That forever scars the psyche,
Everlastingly searing moments
That eternally burns too bright.

The blank vagueness of the eyes
Gazes through you,
Now past and far beyond,
Without judging,
Without emotion,
Without compassion
Without mercy, without humanity.

They stare, dead and blank, unfocused and vague,
Knowing everything, fixed on nothing,
Mirroring the soul.
Welcome Home.


போர்க்கண்கள் 

அவர்களின் பார்வைக்குப் பின்னால்
பதுங்கியிருக்கும் ஆன்மா எங்கே வாழ்ந்தது.
போரின் கொடூரத் தடங்களை அதிகமாகப் பார்த்துப் பழகிப்போன கண்களுக்கு 
உண்மை நெடுந்தூரத்தில் தான் தெரியும்   
அது மனித உணர்வாற்றலுக்கு அப்பாற்பட்டது,
மனித பகுத்தறிவுக்கு எட்டாதது
மனித மனநிலைக்கு புரிபடாதது. 

கீழுலகின் இறப்பும் படுகொலையும் 
கனநேரத்தில் தீக்கிரையாகி அடையாளச்சின்னத்துடன் பெறும்
ஒரு நிலையான உருவத்தில்,
அட்டூழியங்களின் எல்லை
சொற்களால் விளக்க முடியாத
பேரச்சமாகிக்கிடக்கிறது.
அது என்றென்றைக்கும்
ஆன்மாவின் வடுக்கள்,
எக்காலத்திலும் மரத்துப்போகும் கணம்
அந்த நிலைபேறுடைய தீத்தழும்பு மிகவும் பளபளப்பாக பிரகாசிக்கிறது.

கண்களின் வெற்று உருவம்
உன் வழி உற்றுப்பார்க்கிறது
கடந்த காலத்தை
அறியவொண்ணாததாய்,
தீர்ப்பின்றி
மனக்கிளர்ச்சியின்றி
பரிவின்றி
கருணையின்றி, மனிதநேயமின்றி.

அவர்களின் மருட்சிப்பார்வை,
உயிரற்றது, வெறுமையானது,
கூர்மையற்றது, தெளிவற்றது
எல்லாம் தெரிந்தும்
உறுதியானது ஏதுமில்லை
ஆன்மாவின் பிரதிபலிப்பைத் தவிர.

வீட்டுக்கு வருக
 











கருத்துகள் இல்லை: